Saturday, November 21, 2015
சீஷத்துவத்தின் விலை என்ன?
சீஷத்துவத்தின் விலை என்ன?
சீஷத்துவத்தின் விலை என்ன? மெய் வாழ்வுக்கு
வழி அமைக்கும் வரலாற்று நாயகன் கிறிஸ்து இயேசுவின்
சீடனாக அவரது அடிச்சுவடுகளில் சிலுவைகளை சுமந்து
வெற்றி பயணமாக தொடரட்டும் இந்த தொடரோட்டம் !
நிமிர்ந்து நில்! துணிந்து செல்!
துயரங்களை தூயவர் துணையோடு தூக்கி எறி!
வெற்றி நிச்சயம் இயேசுவின் திருப்பெயரினால்!
பவுல்கள் எங்கே? பேதுருக்கள் எங்கே?
வனாந்திரத்தின் சத்தம் யோவான் ஸ்நானகன்கள் எங்கே?
உப்பு எங்கே? ஒளி எங்கே?
இரும்பையும் மிதக்க வைக்கும் கர்த்தரின் அபிஷேகம் எங்கே?
போரின்றி வெற்றி இல்லை!
வெற்றிகளின்றி கீரீடங்கள் இல்லை!
எதிரிகள் இன்றி ஜெயம் இல்லை !
இறை மகன் இயேசு கிறிஸ்து இன்றி ரட்சிப்பு இல்லை!
உலகத்தில் இருபவனிலும் உன்னில் இருப்பவர் பெரியவர்!
இமைப் பொழுதும் உன்னை மறவாத இயேசு உன்னோடு!
சிறுநரிகள் சிங்கத்தை உரசி பார்ப்பது ஒன்றும் புதிதல்ல!
கல்வாரியில் சாத்தானை ஜெயித்த கர்த்தர் உன்னோடு!
கர்த்தரின் துணிவே துணை என துணித்து நில்! வீறு கொள்!
உனது விழிகள் உன்னை உருவாக்கியவரையே நோக்கட்டும்!
கர்த்தாவே, சிலுவை பாதை எனது பாதையாகட்டும்!
உமது பாதைகள் ஒன்றே எனது நோக்கமாகட்டும்
அப்பா, உமது எண்ணங்கள் எனதாகட்டும்!
உம் மனது எனதாகட்டும்! உம் சிந்தை எனதாகட்டும்!
எனது கைகளோடு உமது கைகைளை இணைத்து கொள்ளும்!
உலகத்தை நீர் பார்ப்பது போல நானும் பார்க்கட்டும்!
சாத்தனின் சாவல்களுக்கு சாவு மணி! இயேசுவின் நாமத்தில்!
கர்த்தர் உன்னோடு! சத்துருவின் சாவல்களை வென்றிட வா!
சிலுவையிலே சாதனை படைத்த சர்வ பூமிக்கும் ஆண்டவர் உன்னோடு!
உன் இதய சிம்மாசனத்தில் இறைவன் இயேசுவின் ஆட்சி!
சர்வத்துக்கும் ஆண்டவர்! சரித்திரத்தையே பிரித்த சர்வ வல்ல தேவன்!
சர்வாயூதவர்க்கத்தின் பிறப்பிடம்!
நிழல்கள் நிஜமாகும் இயேசுவின் நாமத்தில்! நீ
சிலுவையின் நிழலில் இருக்கும் போது!
அமரிக்கையும் நம்பிக்கையும் நம் பெலனாகட்டும்!
இன்னும் நம் விசுவாச கண்கள் திறக்கப்படட்டும்!
இன்னும் பரிசுத்தமாகுதல் நம் பயணமகட்டும்!
தூயாதி துயவரின் அன்பு ஒன்றே நம் பரிசாகட்டும்!
எட்டு திக்கும் பரவட்டும் இயேசுவின் சுவிசேஷ ஒளி!
அகலட்டும் உலகத்தின் பாவ வழி!
இன்னும் என்ன தயக்கம்!
கிறிஸ்துவுக்குள் நீ யார் என்று உணர்ந்து கொள்!
Conclusion:
கர்த்தாவே,
இமை மூடிய பின்னும் உமை
பற்றும் விசுவாசம்
என் சுவாசம் பரலோகத்திலே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment